Sunday 28 August 2011

ஈழத்தமிழரின் அவலத்துக்கு காரணமானவர்கள்...


முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வூ பெற்ற நீதவான்கள் சிலர் சரத் என் சில்வாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலப்பகுதியில் தாம் பழிவாங்கப்பட்டதாகவும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதவான்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சரத் என் சில்வாவின் அழுத்தம் காரணமாக 42 நீதவான்களுக்கு கட்டாய ஓய்வூ வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அண்மைக்காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய மற்றொருவர் இவர். இவரும் ஒரு இனவாதிதான். சரத் பொன்சேகா இன்றுவரை சிறையில் அவதியுறுகிறார். 

வடக்கும் கிழக்கும் பிரிக்கக் காரணமாக இருந்தவர். சுனாமி நிதியில் மகிந்த பெரும் கையாடல் செய்தும் அவரை நிரபராதி என விடுவித்தவர். அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரியைத் தண்டித்தவர். தவறானவர் ஜனாதிபதியாகக் காரணமாக அமைந்தவர். அதன்மூலம் தமிழரின் பேரழிவுக்கும் மறைமுகக் காரணமாக உள்ளவர். அவர் தண்டனை பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

No comments: