Thursday 25 August 2011

நாவாந்துறையில் நேற்றுமுன்தினம் இரவு

நாவாந்துறையில் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து, வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் ஆள்களை இழுத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

அவர்களின் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரே தம்மை இழுத்துச் சென்று ஈவு இரக்கமின்றித் தாக்கி கை, கால்களை முறித்தனர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். கை, கால்கள் முறிக்கப்பட்ட நிலையிலும் மண்டைகள் உடைக்கப்பட்டு இரத்தம் வழிந்தோடிய நிலையிலும் சுமார் 8 மணிநேரமாக காலை 10 மணி வரைக்கும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இது அனைத்துலகச் சட்டங்களை மீறும் செயல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய நாவாந்துறையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய சிலரால் நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. மேலதிக படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு கூட்டம் கூடிய மக்கள் அடித்து விரட்டப்பட்டனர்

நேற்றுக் காலை 10 மணியளவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். அவர்களில் பலரின் கைகளும் கால்களும் முறிந்து போய் இருந்தன என்று வைத்தியசாலைச் செய்திகள் தெரிவித்தன. இராணுவத்தினர் தம்மை இழுத்துச் சென்று தமது கைகளையும் கால்களையும் அடித்து முறித்தனர் என்று காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.


இலங்கையில் தமிழ்பேசும் பெண்களின் அங்கங்களை அறுத்து எடுக்கும் மர்மமனிதன் என்று அழைக்கப்படும் கிரீஸ் மனிதனின் தோற்றம்...

No comments: