Saturday 27 August 2011

படையினரும், பொலிஸாரும் சாதாரண சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்


சிறிலங்காவில் அவசரகால சட்டம்  நீக்கப் பட்டதையடுத்து இனிவரும் காலங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நினைத்த மாதிரி செயற்பட முடியாது.

இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ எவரையும் விரும்பியவாறு கைது செய்ய முடியாது. அத்துடன் எவரையேனும் கைது செய்ய வேண்டுமாயின் பொலிஸார் போதியளவு சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்படும் நபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக அவசரகாலச் சட்டத்திற்கு பழக்கப்பட்ட இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் சாதாரண சட்டங்கள் பற்றி போதிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

No comments: