Thursday 25 August 2011

அவசரகாலச் சட்டம், இனி வரும் காலங்களில் நீடிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொண்டார். 

1971 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில்  இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது.

அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் இச்சட்டம் அமுல் படுத்தப் பட்டு  தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வருகிறது.

No comments: