Saturday, 6 September 2014

என் கனவு தேசம் My Dream State

கற்பனையில் மட்டுமே சாத்தியமான, நான் கனவு காணும் ஒரு நல்லாட்சி நடக்கும் நாட்டின் அமைப்பும் அதன் இயல்புகளும் - Special Features of My Dream State with Good Governance

இலங்கைத் தமிழர்கள் யார்?

இலங்கைத் தமிழர்கள் பல வகையினர். தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள், முக்குவச் சட்டத்திற்கு உட்பட்ட மட்டக்களப்புத் தமிழர்கள், இந்திய வம்சாவளியாக வந்து மலையகத்தில் பெருமளவில் குடியேறி இலங்கைப் பிரஜைகளான மலையகத் தமிழர்கள் ஆகியோர் பெரும்பான்மையினர். செட்டித் தமிழர்கள், தமிழ் பறங்கியர், தமிழ் மலாயர்கள், மலையகம் சாராத இந்திய வம்சாவழித் தமிழர்கள், வன்னித் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், நிகம்பு தமிழர்கள் என பல வகையினர் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்கள் என்போர் ஈழத் தமிழர்களையும், ஈழத் தமிழர்கள் என்போர் வடபகுதி தமிழர்களையும் குறிப்பாக யாழ் தமிழர்களையும் சுற்றியே சரித்திர ரீதியான பதிவுகள் குறித்து நிற்கிறது. 

Monday, 19 September 2011

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 தமிழர்கள் தெரிவு


நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வேறுவேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.

முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன. நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் ஒன் அறைவல் வீசா முறை ரத்து


மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் ஒன் றைவல் விசா வசதி வழங்கப்படும். 

78 நாடுகளின் பிரஜைகள் ஒன்லைன் முறையில் இணையம் ஊடாக விசா பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் றைவல் விசா முறை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கைக்கான குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Saturday, 10 September 2011

நீதியாகச் செயற்படத் தயாரில்லாத சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக ஒய்வு பெற்ற கல்வி அதிகாரியான ஆனந்தராஜ் விருப்பு வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ் தேசியக் ட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு முன்னர் எடுத்த முடிவின் பிரகாரம் கூடிய விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்டவரே தலைவரென்ற அடிப்படையில் ஆனந்தராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் இது வரை சத்தியப்பிரமாணத்தினை செய்யாது விலகி இருந்து வருகின்றார். இதனால் கூட்டத்தினை கூட்டமுடியாது குழப்ப நிலை தொடர்கின்றது. போதிய பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான தீர்மானமெதனையும் சபை எடுக்க முடியாது உள்ளது.

மக்களால் நிராகருக்கப் பட்டவர் சர்வாதிகாரமாக பதவியைப்பெற முயற்சி. மகிந்தவை தாக்குவதற்கு தகுதியுடையவரா?

மீண்டும் குழப்ப அரசியலுக்குள் தமிழ் தரப்பு

எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பின் போது கிறிஸ் பேய் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மீண்டும் குழப்ப அரசியலை நடாத்த தமிழ் தரப்பு ஆரம்பித்துள்ளது. ஆனந்தசங்கரி தலைமை தாங்கிய போதே அது குழப்பமாகும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். கடந்த வாரம் இந்தியாவில் தமிழரின் தீர்வு தொடர்பிலும் அவர் குழப்பியது தெரிந்ததே

கூட்டமைப்பு ஆனந்தசங்கரிக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறதா

மக்கள் போராடத் தயாராக உள்ள ஒரு கால கட்டத்தில் அதற்கு தலைமை தாங்க கூட்டமைப்பு தயாராகவில்லை. 1977இல் இளைஞர்களுக்கு தலைமை தாங்காமல் வழிநடாத்தாமல் போனதால் கூட்டணி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு கொண்டுள்ளதா

வேறு யாரும் இல்லை என்பதற்காக தகுதியில்லாதவர்கள் இடைவெளியை நிரப்ப முடியுமா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் இது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள்


பொதுமக்கள் சோதனை, வீடுகளை சோதனையிடுதல், வீதித் தடைகளை ஏற்படுத்துதல், ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற அதிகாரங்களை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி முப்படையினருக்கு  வழங்கியுள்ளார்

தேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் ரத்தான புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன புவநேக பண்டார ராஜகுருவின் நியமனமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி நீடித்துள்ளார்.

Wednesday, 7 September 2011

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும் தொடரும் சீமான் கைது

மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி சீமான் வேலூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அதற்கு பொலீஸ் அனுமதி மறுத்து விட்டது. தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டனர்

யுத்தக் குற்றத்திற்காகஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் யுகஸ்லாவிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மொம்சிலோ பெரிசிக் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொஸ்னியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மொம்சிலோ பெரிசிக் நேரடியாக படுகொலைகளையோ அல்லது வேறும் சித்திரவதைகளையோ மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் தொலைவில் இருந்து சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையம்

போர் காரணமாக இடம் பெயர்ந்த ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சம்பூரில் மீள் குடியேற்றப்படாதுள்ள நிலையில், சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்த ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

ஒவ்வொரு நபரும் தனது இருப்பிடத்தற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி வந்த இந்தியா தனது கூற்றுக்கு முரணாகச் செயற்படுவது தவறானது, அதன் போலி முகத்தை அம்பலப்படுத்துகிறது.