Wednesday 31 August 2011

சிலாபம் முன்னேஸ்வரம் மிருக பலி பூஜைக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு


இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டதுஇந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14  பெளத்த அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்றைய மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்ன தேரர் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக சட்டசபையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம்



ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமையானது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது .தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகுடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Tuesday 30 August 2011

மனிதாபிமானமே இல்லாத ஒன்று


ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப்படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.

இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.

இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூக்குத் தண்டனையைஎட்டு வாரங்கள் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான  மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தூக்குத் தண்டனையை எட்டு வாரங்கள் நிறுத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  

தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Monday 29 August 2011

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.  புதன், வியாழன் ஆகிய இரு நாட்களும் நீதிமன்றம் விடுமுறை நாள் என்பதால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 20 ஆண்டுகள் மொத்தமாக சிறையில் இருந்து விட்ட நிலையில் 11 ஆண்டுகள் கழித்து கருணை மனுவை நிராகரித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா

ராஜீவ் கொலைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனை மீதான கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பின்னர் இதில் ஒரு மாநில முதல்வர் தலையிட அதிகாரம் இல்லை. இவர்கள் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரமோ, அதை தடுத்து நிறுத்தும் அதிகாரமோ என்னிடம் இல்லை என்று சட்டமன்றத்தில் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.


தமிழக முதல்வர் ஜெயலலிதா  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உதவ முடியாது என அறிவித்து விட்ட நிலையில் மூவரையும் காப்பாற்ற நீதிமன்றம் மட்டுமே இறுதி வாய்ப்பாக உள்ளது.

ஈகைப்போராளி செங்கொடி - காலத்தால் அழியாத காவிய நாயகி

ஒரு நோக்கதிற்காக் உயிரை மாய்த்துக் கொள்வது இழிவானது என்றால் அன்னா ஹஸாரே ஊழலை ஒழிக்க சாகும்வரை தொடங்கிய உண்னாவிரதமும் இழிவானதுதானே? ஆனால் அன்னா ஹஸாரேயின் ஒப்பந்த போராட்டம் தேசிய தியாகமாக மாறிவிடுகிறது செங்கொடி தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது உயிரை மாய்த்துக்கொண்டால் அது முட்டாள்தனம் என்று சொல்வதற்கு இங்கு மேதைகள் இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் முத்துக் குமார் என்ற இளைஞன் தன்னைத் தானே எரித்துக்கொண்ட பிறகுதான் தமிழர்களின் மனசாட்சி சற்றே கண் விழித்தது. இப்போது மூவரின் மரண தண்டனை விவகாரத்தில் நமது நியாய உணர்வை தூண்டுவதற்காக ஒரு இளம் பெண் தன்னைத் தானே உயிரோடு எரித்துக்கொண்டிருகிறாள். அன்னா ஹஸாரேயைப் போல செங்கொடி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதை நம் ஊடகங்களோ அறவுணர்ச்சி மிக்க மத்தியதர வர்க்கமோ பொருட்படுத்துமா?

முத்துக் குமாரும் செங்கொடியும் செய்தது உணர்ச்சிவசப்பட்ட தற்கொலைகள் அல்ல. அவை ஒரு அரசியல் போராட்டத்தின் மனம் உருகச் செய்யும் தியாகங்கள். இந்த இளைஞர்களின் செயல் யாரையும் மனம் உடையச் செய்வது. இவை முன்னுதாரணம் ஆகக் கூடாது. ஆனால் எவ்வளவு கத்தினாலும் நீங்கள் மொளனமாகத்தான் கடந்து போவீர்கள் என்றால் தங்கள் நியாயத்தை சொல்வதற்கு ஒரு முத்துக் குமாரோ செங்கொடியோ தங்களைத் தாங்களே கொளுத்திக்கொண்டு உங்கள் முன்னே வந்து மன்றாடுவதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

ஒரு கருத்தை சொல்வதற்கு கூட அதன் விளைவுகள் குறித்து நூறு முறை யோசிக்கும் நாம் செங்கொடியை கோழை என்று அழைக்கக் கூடாது.

கண்ணீர் கலந்த வீர வணக்கம்

தியாகச்சுடர் ♥ வீரமங்கை செங்கொடி

பெண் ஒருவர் தீக்குளித்து மரணம்!

தன்னார்வக் குழுவான காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பின் முழு நேர உறுப்பினராக உள்ள காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங் கொடி ( வயது 27) என்பவர் இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.


21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Sunday 28 August 2011

தூக்குத் தண்டனை நியாயமானது



ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

ராஜீவ் கொலையாளிகளுக்கு சட்டம் வழங்கிய தீர்ப்பின்படி தூக்கில் போட வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமை. கொலையாளிகள் 3 பேரும் எல்லா மேல்முறையீடுகளையும் கடந்து வந்து விட்டார்கள். எனவே தண்டனையை நிறைவேற்றத் தான் வேண்டும் என்றார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான குற்றசாட்டுகள் என்ன?

முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலி சுபாவுக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

சிவராசன் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தாக சாந்தன் மீதும், பேரறிவாளன் மீது ராஜிவைக் கொன்ற வெடிகுண்டுக்கு பயன்படுத்திய பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனடிய ஈழத் தமிழரின் கதாநாயகன் அமரர் ஜக் லெய்டன்

மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் ஈழத் தமிழர்களின் நண்பருமான அமரர் ஜக் லெய்டனிற்கு கனடியத் தமிழர் சமூகம் உணர்வு பூர்வமான அஞ்சலியை இன்று செலுத்தியது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வினை தமிழ் மக்கள் நடத்திய விதம் கனடியத் தேசிய ஊடகங்களை வெகுவாகக் கவர்ந்ததோடு இது தொடர்பான செய்திகளையும் அவை வெளியிட்டுள்ளன.

“Thank You Jack”   என்ற பாரிய பதாதகையுடன் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு தாமாக வருகை தந்த கனடியர்களும் பல்லின மக்களும் தமிழர்களுடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தாம் தமிழர்களையிட்டுப் பெருமையடைவதாக நேரடியாகவே பாராட்டினர்.

தமிழர்களால் விநியோகிக்கப்பட்ட ரீ-சேட்களை தாமும் வாங்கியணிவதில் பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட கனடியர்கள் மும்முரமாக ஈடுபட்டதை கனடியத் தொலைக்காட்சிகள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தன.

கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்ட இந்த ரீ-சேட்களிற்கு பெருமளவு மவுசு ஏற்பட்டு இறுதியில் அவை பற்றாக்குறையாகும் அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.

தமிழர்களால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அது பல்லின மக்களின் நிகழ்வாக அவர்களின் பங்குபற்றுதலுடன் நடந்தது அனைவரையும் கவர்ந்த விடயமாகவிருந்தது

ஜக் லெய்டனின் மனைவி தமிழர்களுடன் வந்து கரிசனையுடன் அளாவளாவினார். ஜக் லெய்டனின் மகன் மைக் லெய்டன் தமிழர்கள் ஒவ்வொருவரிற்கும் தனது நன்றியறிதலைத் தெரிவிக்குமளவிற்கு தமிழர் சமுதாயத்துடனேயே ஒன்றியிருந்தார்.

கனடியப் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் மக்களோடு மக்களாக இந்த நிகழ்வு ஏற்பாடுகளில் கலந்து கொண்டிருந்தார். அமரராகிவிட்ட ஜக் லெய்டனால் ஈழத் தமிழருக்காக உருவாக்கப் பட்ட ஒரே மக்கள் பிரதிநிதி அவர். ஈழத் தமிழருக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் உருவாக்கக் காரணமாக இருந்தவர் அமரர் ஜக் லெய்டன். அதற்காக பலவழிகளில் உதவியவர் அமரர் ஜக் லெய்டன். கடந்த 25 வருடமாக ஈழத் தமிழரின் பல குறைகளுக்கு தீர்வுகாண உதவியவர் அமரர் ஜக் லெய்டன். தீர்வு கண்டவர் அமரர் ஜக் லெய்டன். தமிழர் சமுதாயத்தைக் கனடிய தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் காரணமாக இருந்தவர் அமரர் ஜக் லெய்டன். கனடிய ஈழத் தமிழரின் கதாநாயகன்  அமரர் ஜக் லெய்டன்


ஈழத் தமிழரின் 'மாமனிதனுக்கு' நாமும் அஞ்சலி செலுத்துகிறோம். உன் வாழ் நாளின் நிறைவாக கடமை புரிந்து விட்டாய் மாமனிதனே, இனி நீ அமைதியாகத் துயில் கொள்வாயாக



ஈழத்தமிழரின் அவலத்துக்கு காரணமானவர்கள்...


முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வூ பெற்ற நீதவான்கள் சிலர் சரத் என் சில்வாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலப்பகுதியில் தாம் பழிவாங்கப்பட்டதாகவும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதவான்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சரத் என் சில்வாவின் அழுத்தம் காரணமாக 42 நீதவான்களுக்கு கட்டாய ஓய்வூ வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அண்மைக்காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய மற்றொருவர் இவர். இவரும் ஒரு இனவாதிதான். சரத் பொன்சேகா இன்றுவரை சிறையில் அவதியுறுகிறார். 

வடக்கும் கிழக்கும் பிரிக்கக் காரணமாக இருந்தவர். சுனாமி நிதியில் மகிந்த பெரும் கையாடல் செய்தும் அவரை நிரபராதி என விடுவித்தவர். அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரியைத் தண்டித்தவர். தவறானவர் ஜனாதிபதியாகக் காரணமாக அமைந்தவர். அதன்மூலம் தமிழரின் பேரழிவுக்கும் மறைமுகக் காரணமாக உள்ளவர். அவர் தண்டனை பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.