Thursday 25 August 2011

ஜெயலலிதா ஆட்சி 100-வது நாள்

ஜெயலலிதா நிறைய மாறி விட்டார். காலமும் சூழலும் அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது என்பது தெரிகிறதுஅவர் மக்கள் மனங்களை வெல்லக் கூடிய ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள்.

இலங்கை விவாகரத்தில் அவர் அனைவரின் மனங்களையும் வென்றிருக்கிறார்ஏனைய எல்லாக் கட்சிகளையும் ஓரம் கட்டி விட்டு இன்று ஈழத் தமிழர்களுக்கு நானே பொறுப்பு என்பது போல இரண்டு அதிமுக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். ஈழ மக்கள் சம உரிமையும், சமத்துவமும் பெரும் வரை நான் ஓய மாட்டேன் என்று அவர் அறிவித்தார். ஈழத் தமிழர்களின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா தான்.

தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களும் உலகெங்கிலும் உள்ள ஈழ ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர். எல்லா தடைகளையும் மீறி ஈழ மக்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கும் ஜெயலலிதா அவர்களுக்காக விரைவில் அரசியல் சமத்துவத்துக்கான கோரிக்கைகளை முன் மொழிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

ஈழ விவாகரத்தில் அனைவரின் நன் மதிப்பைப் பெற்ற ஜெயலலிதா சமச்சீர் கல்வி விஷயத்தில் கோடிக்கணக்கான பெற்றோரின் கசப்பை சம்பாதித்துக் கொண்டார். தனது பரம எதிரி கருணாநிதியின் திட்டமாக பார்த்தாரே தவிற உண்மையில் இதில் கோடிக்கணக்கான மக்கள் பலன் அடையப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத் தவறி விட்டார். இறுதியில் நீதிமன்றம் மூலம் சமச்சீர் கல்வி உரிமை வென்றது

No comments: